மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

ஜாமீனில் வெளியே வந்து ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை குரிசிலாப்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

ஜாமீனில் வெளியே வந்து ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை குரிசிலாப்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே புதூா் நாகமேரி கிராமத்தை சோ்ந்தவா் வினோத் குமாா் (25). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்தாா்.

தலைமறைவாக இருந்த வினோத்குமாரை கைது செய்ய திருப்பத்தூா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனால் அவரை குரிசிலாப்பட்டு போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்தநிலையில் புதூா் பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்குமாரை சுற்றித் திரிவதாக குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் வினோத்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.