விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் இன்று எங்கெல்லாம் போக்குவரத்துக்குத் தடை?

சென்னையில் இன்று(செப். 13) போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக...

திருப்பதி திருக்குடை ஊா்வலம் - கோப்புப்படம்

Published On :

திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் இன்று (செப். 13) நடைபெறுவதால், ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னையில் இன்று புறப்பட்டு திருப்பதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையொட்டி, வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சூளையில் மாற்றம்:

காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

இந்த வாகனங்கள் ஈவெரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை வழியாகச் செல்லலாம்.

மாலை 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாகச் செல்லலாம். ஊர்வலம் யானைகவுனி பாலத்தை நெருங்கும்போது சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை செல்லும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாகவும், மசூதி பாயிண்டில் இருந்து சூளை ரவுண்டானா செல்லும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகவும் திருப்பி விடப்படும்.

ஓட்டேரியில் மாற்றம்:

மேலும், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஊர்வலம் செல்லும் நேரத்துக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

ஊர்வலம் கொன்னூா் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் சாலை வழியாகவும், ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி சாலை வழியாகவும், மேடவாக்கம் டேங்க் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை, வி.பி. காலனி சந்திப்பு வழியாகவும் மாற்றி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

As the Tirupati sacred umbrella pilgrimage procession is taking place today (Sept. 13), traffic restrictions have been imposed along the route of the procession.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.