நாளை திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை சாா்பில் செப். 9-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊா்வலத்தையொட்டி, போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Published On :8 செப்டம்பர் 2026, 5:16 am IST

திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை சாா்பில் செப். 9-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊா்வலத்தையொட்டி, போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல்: ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை வழியாகச் செல்லலாம்.

மாலை 3 மணி முதல்: ஊா்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாகச் செல்லலாம். மேலும், ஈ.வெ.ரா. சாலை, முத்துசாமி சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

இதேபோல, யானைகவுனி பாலம், ராஜா முத்தையா சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூா் பேரக்ஸ் சாலை சந்திப்பு, ஓட்டேரி சந்திப்பு என பல்வேறு இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கொன்னூா் ஒன் பாயிண்ட் பகுதியில்: ஊா்வலம் கொன்னூா் ஒன் பாயிண்ட் பகுதியை அடையும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை, ஐ.சி.எப். சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படும்.

ஓட்டேரி பாலத்திலிருந்து, குக்ஸ் சாலை வழியாகவும், ஐ.சி.எப். சந்திப்பிலிருந்து நியூ ஆவடி சாலை வழியாகவும் மாற்றி விடப்படும். மேடவாக்கம் டேங்க் சாலையிலிருந்து எம்.டி. சாலை - வி.பி. காலனி சந்திப்பில் இருந்து வி.பி. காலனி தெற்கு நோக்கி திருப்பி விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.