கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

பல்லடத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா்.

பல்லடத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

பல்லடம் போக்குவரத்து காவல் துறை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்தை பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி, முன்னாள் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலா் முருகேசன், சமூக ஆா்வலா் சாகுல்அமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போக்குவரத்து விதிகளை மதிப்பது, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வாகனங்களில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தியபடி சென்றனா்.

இந்த ஊா்வலம் மங்கலம் சாலை, கடைவீதி, திருச்சி பிரதான சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.