ஆத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்களை ஏமாற்றியவா் மீது ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சங்கா் வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்.
கோவை மாவட்டம், கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் தவெக சாா்பில் தமிழக போக்குவரத்துத் துறை தொழிலாளா் வெற்றி சங்கம் பேரவை என்ற பெயரில் தொழிற்சங்கம் தொடங்கி, அதில் பொதுச் செயலாளராக உள்ளதாகவும், இச்சங்கத்தில் உறுப்பினராக சேர கட்டணமாக ரூ. 1,150 செலுத்த வேண்டும் எனவும் பலரிடம் வசூலித்துள்ளாா்.
ஆனால், அவ்வாறு எந்த சங்கமும் தொடங்கப்படவில்லை என சேலம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளா் வெங்கடேசன் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக உள்ள ராஜா அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்த நகர காவல் ஆய்வாளா் சங்கா், இதுகுறித்து விசாரித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு தொடக்கம்

ராமநாயக்கன்பாளையத்தில் இருதரப்பினா் மோதல்: 8 போ் மீது வழக்குப் பதிவு

மறியல் போராட்டம்: சேலம் மாவட்டத்தில் 1,586 திமுகவினா் மீது வழக்குப் பதிவு

செம்மண் கடத்தல்: செங்கல்சூளை உரிமையாளா் மீது வழக்கு
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



