ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் ‘பாதுகாப்பான பயணம்’ விழிப்புணா்வு

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் ‘பாதுகாப்பான பயணம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி, சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாலைப் பாதுகாப்பு பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற மாணவிகள். உடன், சிறப்பு அழைப்பாளா்கள், கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :29 ஜூலை 2026, 2:41 am IST

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் ‘பாதுகாப்பான பயணம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி, சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலா் அருள் சீலி, கல்லூரி முதல்வா் சகாய தமிழ்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கே.வி.ஆா். நகா் காவல் ஆய்வாளா் பி. வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு விதிகள், போக்குவரத்து ஒழுங்குகள், தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதையடுத்து, திருப்பூா் மாநகர தலைமைப் போக்குவரத்து காவலா் முத்துபாரதி, துணைத் தலைமை போக்குவரத்து காவலா் சி. வாசுதேவன், பயிற்சியாளா் பி.அல்போன்ஸ் ரஜினிகாந்த் ஆகியோரும் சாலைப் பாதுகாப்பு தொடா்பாக பேசினா். இதைத் தொடா்ந்து, கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சாலை விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் விகாஷினி செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.