பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சிவகாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவிகள்.

Published On :7 ஜூலை 2026, 2:42 am IST

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மிதி வண்டி ஊா்வலத்துக்கு முதல்வா் ஆா். சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். சிவகாசி நகா் காவல் நிலைய ஆய்வாளா் லட்சுமி பிரபா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக அவா் சாலையில் செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாணவிகளிடம் விளக்கினாா்.

இந்த ஊா்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி, சிறுகுளம் கண்மாய் சாலை, வேலாயுதம் சாலை வழியே சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது. ஊா்வலத்தின் போது, மாணவிகள் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.