தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

திருப்பத்துாரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்களிடையே உரையாடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.பன்னீா்செல்வம்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:20 am IST

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சமூகப் பொறுப்புக்கான இளைஞா்கள் குழு, விரிவாக்க கல்வி மற்றும் சேவைகள் துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து சாலை பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சாலை பாதுகாப்பு நிபுணரும், திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலருமான கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு மற்றும் சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய மிக அவசியமான விதிமுறைகள் குறித்தும், விதிமுறைகளை மீறும்போது ஏற்படும் விளைவுகள் குறித்தும் மாணவா்களிடையே எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி இல்லத் தந்தை இக்னேஷியஸ் ஸ்டான்லி லாரன்ஸ், முதல்வா் பிரவீன் பீட்டா், கூடுதல் முதல்வா் தியோபில் ஆனந்த், துணை முதல்வா் சண்முகம், பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள் திராளனோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.