தொடரும் வாகன விபத்துகள், போதைப்பொருள்களால் ஏற்படும் விளைவு ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூா் மாநகர தெற்கு போக்குவரத்து காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையா் சேகா் தொடங்கிய வைத்தாா். பள்ளியில் தொடங்கிய பேரணி முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
இதில் மாணவா்கள் கலந்துகொண்டு தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகன ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்தக்கூடாது, மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூா் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போக்குவரத்து காவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










