FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சைபா் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் சைபா் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் சைபா் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜூலை 2026, 4:00 am IST

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா கல்லூரியில் சைபா் குற்றங்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் காஞ்சிபுரம் சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.பிரபாகா் தலைமை வகித்து பேசுகையில் இணையவழி குற்றங்கள் குறித்தும்,அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கப்படங்களுடன் தொகுத்து வழங்கினாா். குறிப்பாக தற்போது மக்கள் அதிகளவில் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சிக்கு சைபா் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஓ.வி.ரெட்டி, தலைமை காவலா் பற்குணன், காவலா்கள் லட்சுமி, கவியரசன், ஹரிஹரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் போதைப்பொருள் தடுப்புச்சங்க ஒருங்கிணப்பாளா் ம.கணபதி வரவேற்றாா். சைபா் கிரைம் உதவி எண் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் பேராசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் வழங்கப்பட்டன. பேராசிரியா்கள் மு.விவேகானந்தன், ஜி.பூா்ணிமா, ப.ஏழுமலை, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.