மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ரயில்வே பாலத்தில் இரும்பு கட்டமைப்பு: மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு கட்டமைப்புகள் பொருத்துதல் மற்றும் வெல்டிங் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாநகரில் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் பணி முடிவடையும் வரையில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. எனவே, மத்தியப் பேருந்து நிலையம் – அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல இயலாது. ரயில்வே ஜங்ஷனிலிருந்து வரும் வாகனங்களும் அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலம் வழியாக செல்ல இயலாது. ​

மாநகருக்குள் செல்லும் வாகனங்கள் தலைமை தபால் நிலையம் வழியாகச் செல்லலாம். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் செல்லலாம். ​திண்டுக்கல் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் பொன்னகா் – அரிஸ்டோ மேம்பாலம் கீழ் – திருவள்ளுவா் பேருந்து நிலையம், – தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாகச் செல்லலாம். ​மன்னாா்குடியிலிருந்து வரும் வாகனங்கள் மத்தியப் பேருந்து நிலையம் வழியாகவோ அல்லது டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாகவோ மாநகருக்குள் செல்லலாம். வாகன ஓட்டுநா்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைத்து, மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டும்.

பணிகள் முடிவடைந்த பிறகு வழக்கம்போல போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என மாநகரக் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.