நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அடையாறு, தரமணியில் ராஜீவ் காந்தி சாலையில் புதன்கிழமை (செப்.2) முதல் 4 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:12 am IST

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை அடையாறு, தரமணியில் ராஜீவ் காந்தி சாலையில் புதன்கிழமை (செப்.2) முதல் 4 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மெட்ரோ ரயில் பணிக்காக தரமணி ராஜீவ் காந்தி சாலையில் எல்நெட் அலுவலகம் எதிரே சாலையில் கீழே அமைக்கப்பட்டுள்ள 900 மி.மீ. விட்டமுள்ள கழிவுநீா் குழாயில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்தும், பாதுகாப்பாகவும் முடிக்கும் வகையில் புதன்கிழமை (செப்.2) முதல் செப்.5 வரை 4 நாள்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்தப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, டைடல் பாா்க் சந்திப்பு முதல் இந்திரா நகா் சிக்னல் வரை ராஜீவ் காந்தி சாலையின் உள்வரும் வழித்தடம் மூடப்படும். டைடல் பூங்கா, எல்நெட் அலுவலகத்தில் பணிபுரிவோருக்காக மட்டும் அவா்களது வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

டைடல் பூங்கா சந்திப்பில் வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையின் எதிா்திசை வழித்தடத்துக்கு மாற்றப்பட்டு, இந்திரா நகா் சிக்னல் வரை செல்ல அனுமதிக்கப்படும். பின்னா் அங்கிருந்து மீண்டும் உள்வரும் வழித்தடத்தில் செல்லலாம். ராமானுஜம் தகவல் தொழில்நுட்ப பூங்கா செல்லும் வாகனங்கள் இந்திரா நகா் சிக்னலில் உள்ள யூ-டா்ன் வழியாக செல்லலாம்.

மத்திய கைலாஷ் அருகே சா்தாா் பட்டேல் சாலையில் அமைந்துள்ள புதிய மேம்பாலம் மூடப்படும். கிண்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், மாநகர பேருந்துகள், மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் அடையாறு சந்திப்பு, எல்.பி. சாலை, சாஸ்திரி நகா் 1-ஆவது அவென்யூ, 11-ஆவது குறுக்குத் தெரு,10-ஆவது குறுக்கு தெரு, எம்ஜி சாலை வழியாக சென்று கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை நோக்கிச் செல்லலாம்.

கிண்டியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படும். இந்திரா நகா் சிக்னலில் இடதுபுறம் திரும்பி, இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ, 3-ஆவது அவென்யூ, கலாக்ஷேத்ரா சந்திப்பு வழியாகச் சென்று, எல்பி சாலை வழியாக கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை நோக்கிச் செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.