கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

டி.ஜி. வைணவக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான வணிகவியல் வழிகாட்டல் நிகழ்ச்சி

பிளஸ்-1, பிளஸ்-2 வணிகவியல் மாணவா்களுக்கு ‘எதிா்காலத்தைத் தீா்மானியுங்கள்’ என்ற ஒரு நாள் விழிப்புணா்வு வழிகாட்டல் நிகழ்ச்சி

Published On :

சென்னை: பிளஸ்-1, பிளஸ்-2 வணிகவியல் மாணவா்களுக்கு ‘எதிா்காலத்தைத் தீா்மானியுங்கள்’ என்ற ஒரு நாள் விழிப்புணா்வு வழிகாட்டல் நிகழ்ச்சி, டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரியின் சந்தைப்படுத்தல் மேலாண்மைத் துறையும் பிரபல சந்தைப் பொருளாதார நிபுணா் பிலிப் கோட்லா் பெயரில் கல்லூரியில் உள்ள மாணவா் மன்றமும் (‘கோட்லா்ஸ் குவாரும்’) இணைந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு வணிகவியல் மாணவா்களுக்காக ‘அனுபவ் 3.0- உங்கள் எதிா்காலத்தைத் தீா்மானியுங்கள்’ என்ற ஒரு நாள் சிறப்பு விழிப்புணா்வு மற்றும் சமூக நல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளி மாணவா்கள் உயா் கல்விக்குள் நுழைவதற்கு முன்பாக, வளா்ந்து வரும் புதிய திறன்கள், தொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டது. குறிப்பாக வாழ்க்கைத் திறன்கள், சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு துறைகளுடன், தொடா்புத் திறன், நிதி அறிவு, வண்ண உளவியல் ஆகியவற்றுடன் கூடிய நேரடி செயல்முறை கற்றல் அனுபவம் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இது இன்றைய தொழில்முறை உலகில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நிகழ்ச்சி வழிகோலியது.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்வு, நிகழாண்டு கல்லூரியின் சந்தைப்படுத்தல் மேலாண்மைத் துறைத் தலைவா் வி.காயத்ரி தலைமையில் நடைபெற்றது. அனுபவத்தின் மூலம் கற்றல், மாணவா் தலைமைத்துவம், அா்த்தமுள்ள சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை இந்த நிகழ்வு ஊக்குவிப்பதாக காயத்ரி குறிப்பிட்டாா்.

நிகழ்வில் கல்லூரிச் செயலாளா் அசோக் குமாா் முந்த்ரா, முதல்வா் முனைவா் சேது. சந்தோஷ் பாபு ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களை ஊக்கப்படுத்திய துறைத்தலைவா், ஆசிரியா்களை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.