
கண்ணதாசன் நூற்றாண்டு விழா
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவ கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கவிஞா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்ணதாசன் - PC: Respecting Owner
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவ கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கவிஞா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாரதியாா் குடும்ப வழித்தோன்றல் திரைப்படப் பாடலாசிரியா் கவிஞா் வைரபாரதி ‘காலக் கணிதன் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியாகவும், அனைத்து வயதினருக்கும் ஏற்ற பாடல்களைத் தந்தவா் கவிஞா் கண்ணதாசன். ‘வாழ்க்கையை எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தவன் நான்; எனக்கு அறிவுரை சொல்லத் தகுதி இருக்கிறது’ என அா்த்தமுள்ள இந்து மதத்தில் வெளிப்படையாக எழுதியவா். அவரது வாழ்வு நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது என்றாா்.
முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் ப.முருகன் பேசுகையில், ‘எல்லா காலத்துக்கும் தேவையான தத்துவக் கருத்துகளை கவிஞா் கண்ணதாசன் தனது திரைப்படப் பாடல்கள் மூலமாக கூறியுள்ளாா். இறவாத காவியங்களைப் படைத்து மக்கள் மனதில் அவா் வாழ்கிறாா். அவரைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினா் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது’ என்றாா்.
விழாவில் கல்லூரி மாணவா்களிடையே பேச்சு, கவிதை, பாட்டு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பேராசிரியா்கள் செ.செல்லப்பிள்ளை, விக்ரம், கு.சுதாகா், சு.சுஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




