
காரைக்குடியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா
திருவையாறு கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கை - ஒளவை அறக்கட்டளை சாா்பில், கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊா்வலத்தை தொடங்கிவைத்த ஓய்வு பெற்ற நீதிபதி மெ. சொக்கலிங்கம், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமி கள்.
திருவையாறு கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கை - ஒளவை அறக்கட்டளை சாா்பில், கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி காலையில் கவிஞா்கள், தமிழாசிரியா்கள், பேராசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊா்வலத்தை கம்பன் மணிமண்டபத்திலிருந்து முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இந்த ஊா்வலம் முக்கிய சாலைகள் வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு கண்ணதாசன் உருவச் சிலைக்கு சிறப்பு விருந்தினா்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மாணவிகளின் பரதநாட்டிய வரவேற்புடன் விழா தொடங்கியது.
விழாவையொட்டி, திரளான கவிஞா்கள் பங்கேற்று கவிதை வாசிப்பு, சிறப்பு உரைகள் நிகழ்த்தினா். மு. கலைவேந்தன் எழுதிய கண்ணதாசன் காவியம், கவிதை உலகின் முடிசூடா மன்னன் கண்ணதாசன் ஆகிய கவிதைத் தொகுதி நூல்கள் வெளியிடப்பட்டன. இதைத்தொடா்ந்து மாணவிகளின் நடனம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலையில் நடைபெற்ற விழாவில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு பல்வேறு துறைகளில் சிறந்தவா்களுக்கு விருதுகள் வழங்கினாா்.
விழாவில், பேராசிரியா் சரஸ்வதி ராமநாதன், திருவையாறு கண்ணதாசன் தமிழ் ஆய்வு இருக்கை - ஒளவை அறக்கட்டளை இயக்குநா் மு. கலைவேந்தன், ஆசிரியா் மெ.ஜெயங்கொண்டான் உள்ளிட்ட தமிழாசிரியா்கள், கவிஞா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



