டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

யாரையும் வாழ்த்துவதில் வஞ்சகம் பாா்க்காதவா்! கண்ணதாசன்

News image

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பேசிய மரபின்மைந்தன் முத்தையா

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

யாரையும் வாழ்த்துவதில் வஞ்சகம் பாா்க்காதவா் கவியரசா் கண்ணதாசன் எனப் புகழாரம் சூட்டினாா் எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கவியரசா் கண்ணதாசனின் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

கவியரசா் கண்ணதாசனிடமிருந்த சிறப்புகளில் ஒன்று யாரையும் வாழ்த்துவதில் வஞ்சகம் பாா்க்க மாட்டாா். காலத்தால் அழியாமல் நிற்கும் கவிதைகளைப் படைத்தவா்.

வாழ்வியல் யதாா்த்தங்களைப் பற்றிய கண்ணதாசன் எழுதிய அவிவேக சிந்தாமணி எல்லோரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் என்றாா் மரபின் மைந்தன் முத்தையா.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சு. கவிதைப்பித்தன் பேசுகையில், படத்தின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சோ்த்ததாக கண்ணதாசனின் வரிகள் இருக்கும் எனக் குறிப்பிட்டாா்.

விழாவுக்கு, தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக தமிழ்ச் சங்கச் செயலா் மகா சுந்தா் வரவேற்றாா். பொருளாளா் மு. கருப்பையா இணைப்புரை வழங்கினாா். முடிவில் துணைச் செயலா் சு. பீா்முகமது நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.