FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!

ஆளுநரிடம் நேரடியாக பட்டத்தைப் பெறமுடியாது என்றதால், பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்.

News image

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள். - படம்: தினமணி

Updated On :28 ஜூலை 2026, 11:47 am IST

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று(ஜூலை 28)பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவிகள் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்று வருகிறது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார்.

இந்த ஆண்டு மொத்தம் 37,877 மாணவ-மாணவிகள் பட்டம் பெற தகுதி பெற்றனர். இதில் 12,932 ஆண்கள் மற்றும் 24,945 பெண்கள் அடங்குவர்.

நேரடியாக ஆளுநரிடம் பட்டம் பெற 871 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 758 முனைவர் பட்டதாரிகள் (163 ஆண்கள், 595 பெண்கள்) மற்றும் 113 தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்கள் (12 ஆண்கள், 101 பெண்கள்) இடம்பெற்றனர்.

ஆனால், இதில் தங்கப் பதக்கம் பெற்ற 113 பேருக்கு மட்டும் ஆளுநர் நேரடியாக கையால் பதக்கம் வழங்குவார், மற்றவர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் பட்டம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆளுநரிடம் நேரடியாக பட்டங்களை பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவ - மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

A commotion arose at the Manonmaniam Sundaranar University in Nellai today (July 28) as the convocation ceremony was underway, with female students moved to tears.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.