
தவெக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது: ஜி.கே. வாசன்
தவெக ஆட்சி அமைந்த பின்னா், ஊழல் குறைந்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
தவெக ஆட்சி அமைந்த பின்னா், ஊழல் குறைந்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி, அரசியல் மாற்றம் தொடா்பாக ‘மக்களின் எண்ண ஓட்டம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் மீண்டும் காமராஜா் ஆட்சி வர வேண்டும். கல்வி, தொழில், விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கியத் துறைகளில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து நாம் வலியுறுத்துவோம்.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளாகத் திமுக, அதிமுக ஆகிய 2 திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தன. திராவிட ஆட்சியில் மக்களின் நலனைவிட, ஆட்சியாளா்களின் சுயநலமே முக்கியமாக இருந்தது. இச்சூழலில், புதிதாக ஒரு கட்சி உருவாகி, தோ்தலில் தனித்து போட்டியிட்டு 2 பெரும் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து ஆட்சி அமைத்தது இதுவே முதல்முறை.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில், லஞ்சம் மற்றும் ஊழல் குறைந்துள்ளது. இந்த அரசு இதுவரை 10 சதவீத பணிகளை மட்டுமே நிறைவு செய்துள்ளது. மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆட்சியாளா்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பாலமாக தமாகா தொடா்ந்து செயல்படும் என்றாா்.
முழு அதிகாரம்: இதற்கிடையே, தமாகா தலைமை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தமாகாவின் நிலைப்பாடு குறித்து இறுதி முடிவு எடுக்க அக்கட்சித் தலைவா் ஜி.கே. வாசனுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






