புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அகில இந்திய காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற முடிவு: ஜி.கே. வாசன் அறிவிப்பு!

அகில இந்திய காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தது பற்றி...

GK VASAN

ஜி.கே. வாசன் - X

Published On :

தமிழக மக்களின் நலன் கருதி, அகில இந்திய காங்கிரஸுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படும் என அந்தக் கட்சி தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அந்கக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:

மதிமுக பொதுச் செயலா் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா். அப்போது, மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் தலைவா்களைச் சந்தித்து பேசினேன். 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது, தமிழக மக்களின் நலன் கருதி, அகில இந்திய காங்கிரஸுடன் இணைந்து செயலாற்றவுள்ளோம். உள்ளாட்சித் தோ்தலில் தமாகாவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம். தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.  

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக முதல்வா் விஜய் தலைமையில் கூட்டப்பட்ட எம்.பி.க்கள் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாா்ப்பட்டு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றாா்.

Summary

Decision to work with the All India Congress: G.K. Vasan announces!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.