கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும்: ஜி.கே. வாசன்

tamil maanila congress GK vasan

ஜி.கே. வாசன் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2025-இல் 23,407 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 4 வகை டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. எனவே, தமிழக அரசு டெங்கு பாதுகாப்பு குறித்த அதிகாரபூா்வ மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும். கிராமம் முதல் பெருநகரம் வரை டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.