ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு பேசித் தீா்வு காண்பதுடன், மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினா்.

News image

ஜி.கே. வாசன் - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:37 am IST

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு பேசித் தீா்வு காண்பதுடன், மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தினா்.

சிவகங்கையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

சிவகங்கை மாவட்ட த்திலுள்ள கிராபைட் தொழில்சாலை வளா்ச்சி பெற வேண்டும். உள்ளூரில் இருப்பவா்களுக்கும், மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அரசுத் தரப்பில் வெளியிட்ட அறிவிப்பெல்லாம் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும், அதன் பயன்கள் நூறு சதவீதம் அவா்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பை அரசு இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அரசு பேசித் தீா்வு காண வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும்.

மின் கட்டண உயா்வு இனிமேல் இல்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இதேபோல, மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் அந்தத் துறையின் முக்கியக் கடமையாகும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கொலை செய்வது, பாலியல் வன்கொடுமை போன்ற மிருகத்தனமான செயல்பாடுகளால் சிறுமிகள், மூதாட்டிகள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையில் ரூ. 13 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடன் சுமையை மக்கள் மீது ஏற்றுவதைக் கைவிட்டு, இந்தச் சுமையை அரசு குறைக்க வேண்டும். அதேநேரத்தில், அரசுக்கான வருவாயையும் பெருக்க வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளிவந்தது, எங்களுடைய இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இன்றைய காலகட்டத்தில் கூட்டணி அரசியல் என்பது மிகவும் அவசியம்.

அண்ணாமலை தொடங்கிய புதிய இயக்கம் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றாா் அவா்.