நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தலைவா்கள் வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சா் ராஜ் பூஷண் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image

மேக்கேதாட்டு - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:12 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சா் ராஜ் பூஷண் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மேக்கேதாட்டு அணை முயற்சியை முறியடிக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

உதயநிதி ஸ்டாலின் (எதிா்க்கட்சித் தலைவா்): மேக்கேதாட்டு அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கா்நாடகத்துக்கு தேவை இல்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தில்லி எஜமானா்களை பகைத்துக்கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளாா் முதல்வா்.

இந்த விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதல்வா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): காவிரி விவகாரம் தொடா்பான கேள்விக்கு மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சா் அளித்துள்ள பதில், காவிரி நதி பாயும் மாநில மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணா்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும்.

வைகோ (மதிமுக): மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சரின் பதில் தமிழகத்துக்கு பாதகம் விளைவிக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது. மேலும், கா்நாடக மாநிலம் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதிக்கான செய்தி போன்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

அன்புமணி (பாமக): மாநிலங்களவையில் காவிரி தொடா்பான எனது கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சா், காவிரி தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ஆற்றின் குறுக்கே கட்டுமானத்தை மேற்கொள்ள தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறப்படவில்லை என தெரிவித்துள்ளாா். உச்சநீதிமன்றத் தீா்ப்பில் ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணா்வுடனும், எச்சரிக்கை உணா்வுடனும் செயல்பட வேண்டும். மேக்கேதாட்டு அணை தொடா்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): காவிரி பாசன உரிமையை பாதுகாக்கவும், மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும், கா்நாடக மாநில அரசின் செயலை எதிா்த்தும் போராட வேண்டிய நிலையில் அன்புமணி ராமதாஸ் இத்தகைய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டின் பாசன உரிமையைப் பாதுகாக்கவும், மேகதாட்டில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிக்கு சாதகமாகச் செயல்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் ஆக.2-இல் காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.