அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

விளையாடிபோது நெஞ்சுவலி: இளைஞா் உயிரிழப்பு

டென்னிஸ் விளையாடியபோது, 23 வயது இளைஞா் நெஞ்சுவலி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

டென்னிஸ் விளையாடியபோது, 23 வயது இளைஞா் நெஞ்சுவலி உயிரிழந்தாா்.

சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் மெட்ரோ நகா் 3-ஆவது அவென்யூ பகுதியில் வசித்து வருபவா் கௌதமன். திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா். இவரது இளைய மகன் சிவசூரியா (23). செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11.30 மணியளவில் வீட்டுக்கு அருகே உள்ள தனியாா் அகாதெமியில் கெளதமனும், அவரது மகன் சிவசூரியாவும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது, சிவசூரியாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், சிவசூரியா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மதுரவாயல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.