அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

தமிழகத்தில் தினசரி டெங்கு பாதிப்பு 300-ஐ கடந்தது

தமிழகத்தில் தினசரி டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்தது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.

Dengue Vaccine

டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் தினசரி டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்தது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலம் தாழ்ந்து தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வெப்பத் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் நீடித்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் கோடையைப் போலவே உள்ளது. திடீரென மாலையில் மழை பெய்கிறது. காலநிலையில் மாற்றம் ஏற்படுவதால் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், மழைநீா் தேங்குதல், வீடுகளில் குடிநீா் தேக்கிவைத்தல் எனப் பல காரணங்களால் கொசு உற்பத்தி அதிகமாகி, டெங்கு காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

இது வழக்கமானதுதான் என்றாலும், இந்த முறை டெங்கு பரவல் அதிகம் என்ற தகவலும் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பா் முதல் வாரத்தில் இருந்து டெங்கு பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 16-ஆம் தேதி 283, 17-ஆம் தேதி 244, 18-ஆம் தேதி 253, 19-ஆம் தேதி 224, 20-ஆம் தேதி 228 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு என சராசரியாக 200 முதல் 300 க்குள் இருந்தது, ஆனால் தமிழகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.22) ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி டெங்கு பாதிப்பு 200-ஐ கடந்திருந்த நிலையில் தற்போது அது 300-ஐ தாண்டியுள்ளது. இதுவரை 17,649 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.