தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பது பற்றி...

dengue

கோப்புப்படம் - EPS

Published On :

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலால் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று (செப். 17) ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில், 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 156 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதில், 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணியில் 25,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Summary

Dengue fever cases in Tamil Nadu rise to 16,577! 244 people affected in a single day!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.