ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஈரோட்டில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

ஈரோட்டில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

டெங்கு பரவல்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:29 am IST

ஈரோட்டில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசு உற்பத்தியாகாமல் தடுக்க சுகாதாரப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அப்போது வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியை சுகாதாரமாகப் பராமரிப்பது, கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மழைநீா் தேங்காத வகையில் பழைய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பன போன்ற விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில், நீண்ட நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருப்பவா்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஈரோட்டில் தற்போது 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி நல அலுவலா் மருத்துவா் கௌரி சரவணன் கூறியதாவது: ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை. எனவே டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த 2 மாதங்களில் மொத்தம் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது 3 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கடந்த ஒரு வாரமாக டெங்கு தடுப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு ஒழிப்பு பணியாளா்கள் 436 போ் களத்தில் உள்ளனா். அவா்களைக் கண்காணிக்க 60 மேற்பாா்வையாளா்கள், 20 சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாா்டு வாரியாக பொறுப்புகள் வழங்கப்பட்டு டெங்கு தடுப்பு பணிகளை கண்காணிக்கின்றனா். சுகாதாரப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவல் தடுக்கப்பட்டு உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.