காங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,262-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு இத்துரி மாகாணத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் பரவல், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா பாதிப்பு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 3,262 பேரில் 1,437 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தகவலின்படி,
2018-2020 காலகட்டத்தில் காங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா பரவல் சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. இதில் 3,400-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகின.
தற்போதைய பரவல் மிக வேகமாக நிகழ்ந்து வரும் நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்தும் வேகத்தை விட அது பரவி வரும் வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,973 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும் 'புண்டிபுக்யோ' வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Confirmed cases in Congo's ongoing Ebola outbreak have reached 3,262, its Ministry of Health said in an overnight update, nearly the same as the 2018-2020 outbreak that is the largest ever recorded in the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 1,300-ஐ கடந்தது!

வேகமாகப் பரவும் எபோலா: காங்கோவில் 930 பேர் பலி!
காங்கோவில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு; 754 பேர் பலி!

காங்கோவில் எபோலா தொற்றுக்கு 600 பேர் பலி!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



