கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

காங்கோவில் எபோலா தொற்றுக்கு 600 பேர் பலி!

காங்கோவில் எபோலா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது பற்றி..

News image

எபோலா பரவல் - file photo

Updated On :9 ஜூலை 2026, 3:46 pm IST

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 600 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதுதொடர்பாக புதன் இரவு காங்கோ அரசு வெளியிட்ட தகவலின்படி,

எபோலா தொற்றின் பரவல் தொடங்கியது முதல் காங்கோ நாட்டில் 600 பேர் பலியானதாகவும், நாடு முழுவதும் மொத்தம் 1,759 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிப்புகள் எதுவும் பதிவாகாத 'ஷோபோ' மாகாணத்தின் 'கிசங்கானி' பகுதியில் இரண்டு புதிய பாதிப்புகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, அதிகாரப்பூர்வமாகக் கண்டறியப்படாமலே பல வாரங்களாக இந்நோய் பரவியிருந்த நிலையில், காங்கோ அதிகாரிகள் மே 15 அன்று புதிய எபோலா நோய்த்தொற்று பரவலை அறிவித்தனர்.

எபோலா நோய்த் தொற்றுக்குக் காரணமான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ் ஒரு அரிதான வகையாகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ கண்டறியப்படவில்லை.

இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் கடந்த வாரம் இதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர். நிதிப் பற்றாக்குறை, சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நோய்த்தொற்று பரவலின் மையப்பகுதியான கிழக்கு காங்கோவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

New suspected cases of Ebola have been reported in parts of Congo that were previously unaffected, the government said, as the death toll in the country's latest Ebola outbreak reached 600.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.