கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவிலிருந்து மேலும் மூவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளா்கள் மூவர் உயிரிழந்தனா். மேலும் 10 போ் காயமடைந்தனா்.
நிலச்சரிவில் சிக்கி 5 போ் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி மூன்றாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சம்பவ இடத்தில் தீயணைப்புப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மோப்ப நாய்களின் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதிக்கு கீழே உள்ள ஆற்றுப் பகுதியிலும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










