பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

அதிகரிக்கும் எய்ட்ஸ் பாதிப்பு

கர்நாடகத்தில் 7,000 பேருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டது பற்றிய நடுப்பக்கக் கட்டுரை....

News image
Updated On :46 வினாடிகள் முன்பு

அண்மையில் கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் 7,000 பேருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

கடந்த 1982-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஹெச்.ஐ.வி. பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களுக்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை டாக்டர் சுனிதி சாலமன் கண்டறிந்தார். அதன்பிறகு, 1987-ஆம் ஆண்டில் இந்தியாவில் மேலும் 135 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு ஹெச்.ஐ.வி. குறைபாடு எய்ட்ஸôக மாறியிருப்பதும் தெரியவந்தது. அதன் பிறகு, படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்தது.

எய்ட்ûஸ கட்டுப்படுத்துவதற்காக 1993-ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே ஆண்டில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் தன்னார்வ ஆலோசனை மையத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் சுனிதி சாலமன் நிறுவினார்.

ஹெச்.ஐ.வி.யின் மிக முக்கியமான மையப் புள்ளிகளில் ஒன்று ஒரு குறிப்பிட்ட வகை மக்கள் கூட்டத்தினரிடையில் இது அதிகமாக காணப்பட்டதுதான். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்போர், ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கைகள், போதை ஊசிகளைப் பயன்படுத்துவோர் முக்கியமான மக்கள் திரள்களாக அறியப்பட்டனர். ஐ.நா. சபையின் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் உலகில் 3 கோடிக்கும் அதிகமாக ஹெச்.ஐ.வி. நோயாளிகள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் என அனைவரும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு காரணமாக ஹெச்.ஐ.வி. என்றால் என்ன?, எப்படிப் பரவுகிறது?, எப்படிப் பரவாது?, எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம்? என்ற அடிப்படை அறிவு மக்களிடையே சென்றடைந்தது. அதன் பலனாக ஹெச்.ஐ.வி. குறித்து மக்களிடையே புரிதல் வளர்ந்தது. புதிய தொற்று, பல இடங்களில் குறையும் நிலை உருவானது.

கடந்த 2005-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மட்டும் 55 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2007-ஆம் ஆண்டில் அது 25 லட்சம் நபர்களாகக் குறைந்தது என்று இந்திய அரசு அறிவித்தது. 2015-ஆம் ஆண்டு தேசிய அளவில் செய்யப்பட்ட மதிப்பீட்டில் 21.17 லட்சம் இந்தியர்கள் ஹெச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கண்டறியப்பட்டது. அதாவது, 10ஆண்டுகளில் 0.41சதவீதமாக இருந்த ஹெச்.ஐ.வி. தொற்று அளவு 2015-இல் 0.26 சதவீதமாகக் குறைந்தது.

2018-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 12,778 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. 2017 முதல் 2018-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்தன. இதில் சென்னையில் அதிகமானோருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிந்தது.

உலக அளவில் எய்ட்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா முதல் இடத்திலும், நைஜீரியா 2-ஆவது இடத்திலும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி எய்ட்ஸ் பரவல் விகிதம் அடிப்படையில், உலக நாடுகள் வரிசையில் 89-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

அறிமுகம் இல்லாத நபர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, தற்காலிக உறவுகளை சாதாரணமாகக் கருதுவது போன்றவை வாழ்க்கையை ஆபத்தான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும். இரவு நேர கேளிக்கை விடுதி, மது, போதைப் பொருள்கள், பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை, நண்பர்களின் அழுத்தம் போன்ற பல காரணிகள் சேரும்போது, இளைஞர்கள்-கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை அறியாமலேயே ஆபத்தில் சிக்கும் சூழல் உருவாகிறது.

இரவின் வண்ண விளக்குகள் ஒளியைத் தரலாம். ஆனால், வாழ்க்கைக்கான வழிகாட்டுதலைத் தராது. சிந்திக்காமல் எடுக்கப்படும் முடிவு வாழ்நாள் முழுவதும் சுமையாக மாறலாம். விழிப்புணர்வு என்பது விளக்கைப் போன்றது. அது அணைந்தால், இருள் முதலில் மனதில் பிறக்கும்; பின்னர், வாழ்க்கையைச் சூழ்ந்துவிடும். ஆகவே, அந்த விளக்கை ஒவ்வொரு குடும்பமும் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் பரப்ப வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் தன் உள்ளத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களும் வாழ்க்கைத் திறன்களையும் கற்பிக்க வேண்டும்.

அறிவியல் சார்ந்த பாலியல் கல்வி, மனநல ஆலோசனை, மதிப்புகளைக் கொண்ட வாழ்க்கை, பொறுப்பான முடிவெடுக்கும் திறன் ஆகியவை இன்றைய கல்வியின் அங்கமாக மாற வேண்டும்.

வாழ்க்கையை நேசியுங்கள்; அறிவை வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். மனிதநேயத்தை மனதில் நிறுத்துங்கள்.

அப்போதுதான் வருங்காலம் நோயற்றதும், நம்பிக்கையுடனும் வளரும்.

உலக நிதியம், கேட்ஸ் அறக்கட்டளை, உலக வங்கி, ஐ.நா. சபை, டி.எப்.ஐ.டி., யு.எஸ்.ஏ.ஐ.டி. போன்றவை இந்தியாவில் எய்ட்ஸ் ஒழிப்புக்காக நிதி, தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளன. அவை நோயை ஒழிக்க வேண்டும் என்று நிதியுதவி அளித்தாலும், அதை முற்றிலும் ஒழிப்பது மக்களின் கரங்களில்தான் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.