FOLLOW US

ON GOOGLE DISCOVER

கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

7000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு!

கர்நாடகத்தில் 7000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பற்றி..

News image

எச்ஐவி பாதிப்பு - file photo

Updated On :29 ஜூலை 2026, 3:29 pm IST

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவில், கர்நாடக மாநிலம்தான், நாட்டிலேயே அதிக எச்ஐவி பாதித்த நோயாளிகள் வாழும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவுகள் வெளியான நிலையில், மாநில எய்ட்ஸ் தடுப்பு அமைப்புடன் இணைந்து, மாநில அரசு, அனைத்து கல்லூரிகளிலும் எச்ஐவி பரிசோதனை நடத்தி, அது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் கண்டிப்பாக எய்ட்ஸ் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். தனி நபரின் அனுமதியின்றி அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தற்போத 2,60,000 பேர் எச்ஐவி பாதிப்புடன் வாழ்ந்துகொண்டிருககிறார்கள். இவர்களில் 2,05,000 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கிட்டத்தட்ட 54 ஆயிரம் பேருக்கு எச்ஐவி பாதிப்பு என்பது மிகவும் மோசமான உடல்நிலைப் பாதிப்பு என்பதே தெரிந்திருக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ன.

மாநிலம் முழுவதும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, கர்நாடகத்தில் மிக இளம் வயதுடையோருக்கு எச்ஐவி பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இது 18 - 35 வயதுக்குள்பட்டோர் எச்ஐவி பாதித்தவர்களில் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில், கல்லூரி மாணவர்களிடையே எடுக்கப்பட்ட பரிசோதனையில் 18 - 25 வயதுக்குள்பட்ட 7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, கல்விநிலையங்களில் இருந்தே, மாணவர்களுக்கு எச்ஐவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.