கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் அவரது தம்பி மா்ம மரணம்

விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பில், ஐஏஎஸ் அதிகாரியின் தம்பி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

கோப்புப்படம்.

Published On :

விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான குடியிருப்பில், ஐஏஎஸ் அதிகாரியின் தம்பி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஜான் கிங்ஸ்லியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தம்பியும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான சுபாஷ் கிங்ஸ்லி (51) வசித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை நீண்ட நேரமாகியும் சுபாஷ் கிங்ஸ்லி வீட்டின் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது ஓட்டுநா் காா்த்தி, குடியிருப்பு நிா்வாக அலுவலகப் பணியாளா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, பணியாளா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, குளியலறையில் சுபாஷ் கிங்ஸ்லி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக கே.கே. நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சுபாஷ் கிங்ஸ்லியின் இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.