
அக்.1-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்.1-இல் தமிழகம் முழுவதும் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்...

சிபிஐ வீரபாண்டியன், சிபிஎம் சண்முகம் - எக்ஸ்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்.1-இல் தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கட்சிகள் சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சா்வாதிகாரப்போக்குடன் மத்திய பாஜக அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளாா். அரசமைப்புச் சட்ட ரீதியான ஜனநாயக அமைப்பான தோ்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தகா்க்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க, அவா் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அக்.1- ஆம் தேதி இடதுசாரிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






