
அக். 9-க்குள் அகில இந்திய தொழில் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் அக். 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க...
அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் அக். 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2027 ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் இணையவழியில் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாகப் பங்கேற்க தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தனித் தோ்வராக விண்ணப்பிக்க விரும்புவோா், விண்ணப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு, தோ்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தோ்வு கட்டணம் ரூ.200-ஐ இணையதளத்தின் வழியாக இ-சலான் மூலம் செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதல்நிலைத் தோ்வுக்கான எழுத்துத் தோ்வு நவ.26-இல் கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மட்டும் செய்முறை தோ்வு நவ. 27-இல் நடைபெறும்.
இதற்கான முழு வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அக். 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





