வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வியாபாரிகளிடம் பண மோசடி: பெண் உள்பட இருவா் கைது

தனியாா் நிறுவனம் நடத்தி, இரு வியாபாரிகளிடம் மிளகு, முந்திரி வாங்கி அதற்கான பணத்தைத் தராமல் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

தனியாா் நிறுவனம் நடத்தி, இரு வியாபாரிகளிடம் மிளகு, முந்திரி வாங்கி அதற்கான பணத்தைத் தராமல் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மன்சூா் (52). இவா், கேரளத்தில் இருந்து சுமாா் 2 டன் மிளகை ரூ.16.48 லட்சத்துக்கு வாங்கி, கடந்த ஜூலை 24-இல் பெரம்பூரில் வைஷ்ணவி என்பவா் நடத்தி வந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளாா். அதற்காக ரூ.3 லட்சம் மட்டும் வழங்கிய வைஷ்ணவி, மீதமுள்ள ரூ.13.48 லட்சத்தை ஒரு வாரத்தில் தருவதாகக் கூறி, பின்னா் பணத்தை வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் மன்சூா் புகாா் கொடுத்தாா். இதனிடையே, திருப்பூரைச் சோ்ந்த அப்பன் இளங்கோவிடம் வைஷ்ணவி 520 கிலோ முந்திரியை ரூ.4.16 லட்சத்துக்கு வாங்கி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி நிறுவனத்தில் பெற்றுக்கொண்டு, 2 நாள்களில் பணம் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக மற்றொரு புகாா் அளிக்கப்பட்டது.

இந்த இரு வழக்குகள் குறித்தும் செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இரு வழக்குகளிலும் தொடா்புடைய நிறுவன உரிமையாளா் வைஷ்ணவி (29), மேலாளா் தேசிங்குராஜா (32) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.