சொத்துவரி செலுத்த நாளை கடைசி நாள்!
சென்னை மாநகராட்சியில் அபராதமின்றி சொத்து வரி செலுத்த நாளை கடைசி நாள்.

சென்னை மாநகராட்சி - கோப்புப்படம்
சென்னை மாநகராட்சியில் அபராதமின்றி சொத்து வரி செலுத்த நாளை(செப். 30) கடைசி நாள் ஆகும்.
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி, தொழில் உள்ளிட்டவற்றுக்கான உரிமம் வரிகள் உள்ளன. மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை மூலம் ஆண்டில் 2 முறை வரி வசூலிக்கப்படுகிறது.
அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு உறுப்பினர் அலுவலகங்களில் நேரடியாகவும், மாநகராட்சிக்கான இணையதளத்திலும், வாட்ஸ்ஆப், க்யூ ஆர் குறியீடுகள் மூலமும் வரி வசூல் நடைபெறுகிறது.
2026-27-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை நாளைக்குள் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரியை செலுத்தாவிடில் மாதத்திற்கு 1% வட்டி அபராதமாக விதிக்கப்படும்.
சொத்து உரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம், கைபேசி செயலி, 9445061913 என்ற வாட்ஸ்ஆப் எண், மாநகராட்சி கைபேசி செயலி ஆகியவை மூலமும், வரிவசூலிப்பாளர்கள் மூலமும் வரியைச் செலுத்தலாம்.
உரிய காலத்தில் சொத்து வரியைச் செலுத்துவதன் மூலம் தனி வட்டி விதிப்பைத் தவிர்க்கலாம்.
Summary
Tomorrow (September 30) is the last day to pay property tax without penalty in Chennai Corporation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





