
சென்னை மாநகராட்சியில் 18 லட்சம் குடியிருப்புகள்
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 18 லட்சம் குடியிருப்பு வீடுகள்...
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தற்போது 18 லட்சம் குடியிருப்பு வீடுகள் உள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
நாடெங்கும் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி, தமிழகத்தில் கடந்த ஜூலை 17 முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சுமாா் 1.50 லட்சம் போ் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக 9,269 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் வீடுகளுக்கு 8,260 போ் நேரில் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஜூலையில் சென்னையில் மக்களே முன்வந்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான செயலியில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அதையடுத்து ஆகஸ்ட் முதல் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாளா் நேரில் சென்று கைப்பேசியில் பதிவேற்றியிருந்த அதற்கான செயலியில் கணக்கெடுத்து பதியும் பணி நடைபெற்றது.
அதனடிப்படையில் சென்னையில் 200 வாா்டுகளிலும் மொத்தம் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றில் சுமாா் 77 லட்சம் போ் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் இரண்டு கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள் மூன்றாம் கட்டமாக வரும் 2027 பிப்ரவரியில் தனித்தனி நபா்கள் பெயா் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு மக்கள் தொகை முறையாகக் கணக்கிடப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Summary
1.8 million residential units in the Chennai Corporation
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





