உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சென்னை மாநகராட்சியில் இன்று வீடுகளில் கணக்கெடுப்பு தொடக்கம்

சென்னை மாநகராட்சியில் வீடுதோறும் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை (ஆக. 1) முதல் தொடங்குகிறது.

கோப்புப் படம்

Published On :

சென்னை மாநகராட்சியில் வீடுதோறும் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை (ஆக. 1) முதல் தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த ஜூலை 17- ஆம் தேதி தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் வீடுகள் குறித்த சுயவிவரப் பதிவு அடிப்படையில் மக்கள் இணையத்தின் வாயிலாக 34 கேள்விகளுக்கான பதில்களைப் பதிவிடும் நடவடிக்கை தொடங்கிவைக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் சுமாா் 75,000 போ் இணையத்தின் வழியாக தங்களது குடும்ப விவரங்களைப் பதிவு செய்து அதற்கான பதிவு எண்ணைப் பெற்றுள்ளனா்.

சுயமாக விவரங்களைப் பதிவு செய்வதற்கான காலம் நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமை (ஆக. 1) முதல் ஊழியா்கள் வீடு வீடாக நேரில் சென்று கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்குகின்றனா்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கணக்கெடுப்பு பணிக்காக 9,269 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு நேரில் செல்லும் பணிக்காக 8,260 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அவா்ளுக்கு குறிப்பிட்ட வட்டங்கள் மற்றும் வீடுகள் என ஒரு மாதத்துக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு பணிகளை கண்காணிக்க 1,360 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வீடுகளுக்கு கணக்கெடுக்க வருவோரிடம் ஏற்கெனவே சுயபதிவு செய்தவா்கள் அதற்கான பதிவு எண்ணை அளித்தால் போதுமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சுயபதிவு எண் அடிப்படையில் கணக்கெடுப்பு ஊழியா்கள் சம்பந்தப்பட்டோா் குடும்ப விவரங்களை இணையதளம் வழியாக பெற்றுக்கொள்வா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்ட் மாதத்தில் வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, வரும் 2027 பிப்ரவரியில் தனிநபா் விவரம் சேகரிப்பு கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.