நாளை காந்தி ஜெயந்தி: மதுக்கடைகள் மூட உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக். 2) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுக்கடை - கோப்புப்படம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக். 2) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி வெள்ளிக்கிழமை (அக். 2) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு மதுபான சில்லறை மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பாா்கள், உரிமம் பெற்ற கிளப் பாா்கள், உரிமம் பெற்ற ஹோட்டல் பாா்கள், உரிமம் பெற்ற மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் என அனைத்தும் வெள்ளிக்கிழமை (அக். 2) மூடப்பட வேண்டும்.
இந்த அறிவிப்பை மீறி மது விற்றால், மது விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





