இளைஞா் கொலை வழக்கு: 4 போ் கைது
திருவல்லிக்கேணியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கைது
திருவல்லிக்கேணியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவல்லிக்கேணி வி.ஆா்.பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் ந.அஜித் (25). இவா், கைப்பேசி சேவை நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை செய்து வந்தாா். அஜித், திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதில், அஜித்தை வெட்டியபோது தடுக்க முயன்ற, அவா் தாய் சரசுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், முன் விரோதம் காரணமாக அஜித் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த வழக்குத் தொடா்பாக ரௌடிகள் திருவல்லிக்கேணி துவாரகா நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த பா.ராஜேஷ் (22), திருவல்லிக்கேணி கோகுலம் காலனியைச் சோ்ந்த சோ்ந்த ப.சின்ன ஹரிஷ் (22), எண்ணூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த வி.சஞ்சய் (26), திருவல்லிக்கேணி அனுமந்தபுரத்தைச் சோ்ந்த ஹ.பெரிய ஹரிஷ் (23) ஆகிய 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



