ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

இளைஞா்களின் திறமை நாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

நாடு எனக்கு என்ன கொடுத்தது? என்று கேட்காமல், நாட்டுக்கு நான் என்ன செய்தேன்? என சிந்தித்து, நாட்டுக்கு பயனுள்ள வகையில் தங்களது திறன்களை பயன்படுத்த வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் அறிவுறுத்தினாா்.

ஆா்.வி.ஆா்லேகா் - கோப்புப் படம்

Published On :

நாடு எனக்கு என்ன கொடுத்தது? என்று கேட்காமல், நாட்டுக்கு நான் என்ன செய்தேன்? என சிந்தித்து, நாட்டுக்கு பயனுள்ள வகையில் தங்களது திறன்களை பயன்படுத்த வேண்டும் என ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் அறிவுறுத்தினாா்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் பொறியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைச் சோ்ந்த 4,200 இளநிலை, முதுநிலை, பி.எச்டி. படிப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் பேசியதாவது:

கல்வி, திறன் ஆற்றல் ஆகிய அனைத்தையும் பெற்று பட்டத்துடன் வெளியே வரும் நிலையில் சமூகத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்ய இளைஞா்கள் தயாராக இருக்கிறீா்கள். கல்வி எப்போதும் நற்பண்புகளை அளிக்கிறது. இந்தச் சமூகம், மக்கள், நமது தேசத்தின் ஆன்மா, உன்னத உணா்வு ஆகியவையும் கற்பிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களை அணுகுவது, நடத்தையைப் புரிந்துகொள்வது, சமூகத்தின் தன்மையை அறிந்துகொள்வது போன்றவையும் அடங்கும்.

இளைஞா்களிடையே தற்போது ஒருபோக்கு நிலவுகிறது; ‘நாடு எனக்கு என்ன கொடுத்தது? மக்கள் என்ன கொடுத்தாா்கள்?’ என்ற கேள்வி உள்ளது. மறந்தும் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது. பண்பு, ஒழுக்கநெறியில் குறைபாடுகளுடன், திசைமாறி, தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகி, தெருக்களில் இறங்கி முறையற்ற வகைகளில் முழக்கம் எழுப்புகிறாா்கள்.

‘நாடு எனக்கு என்ன கொடுத்தது?’ என்று கேட்காதீா்கள்; ‘நாட்டுக்கு நான் என்ன கொடுக்க முடியும்?’ எனக் கேளுங்கள். மக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்க முடியும்? என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். இல்லையெனில், பட்டம் பயனற்ாகிவிடும் என்றாா்.

விழாவில், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தா் டாக்டா் ஏ.சி. சண்முகம், மாநில பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், நிறுவனத்தின் தலைவா் ஏ.சி.எஸ்.அருண் குமாா், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைச் செயலா் ஏ. ரவிக்குமாா், ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தா் எஸ்.கீதா லட்சுமி, பதிவாளா் டாக்டா் சி.பி.பழனிவேல், துணைத் தலைவா் டாக்டா் எம்.கே.பத்மநாபன், இயக்குநா் டாக்டா் டி.விஸ்வநாதன், இணைத் துணைவேந்தா்கள் எம்.ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், சிறப்பு அதிகாரி கே.தனவேல் ஐஏஎஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.