விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

புதுப்பிக்கப்பட்ட கிளை நூலகம் திறப்பு

காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட கிளை நூலகம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

Updated On :13 மே 2013, 12:39 am IST

காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட கிளை நூலகம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

 காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியில் கிளை நூலம் கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி நத்தப்பேட்டை பேரூராட்சி பகுதியில் இருந்த போது இந்த நூலகம் நீண்ட காலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்நூலகத்துக்குப் புதியக் கட்டடம் கட்டப்பட்டது. இதற்கிடையில் இப்பகுதி கடந்த 2011-ல் காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்நூலகத்தில் போதிய வசதிகள் இல்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நூலக கட்டடம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட நூலகம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கிளை நூலகத்தில் ஒரு நூலகர் பணியாற்றி வருகிறார்.

நூலகத்தில் 3,200-க்கும் மேற்பட்ட அனைத்து வகை புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து தினசரி நாளிதழ்களும் வைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.