மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஜெயலலிதா படம் பயன்படுத்தத் தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு விளம்பரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு 3 வார காலத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

DIN

அரசு விளம்பரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு 3 வார காலத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என, கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதைத் தொடர்ந்து, அரசு விளம்பரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்து ஊடகங்களுக்கு வழங்கிய அரசு விளம்பரங்களில் ஜெயலலிதா படம், பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் அவரது சொந்த பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை விளம்பரங்களில் வெளியிட , பயன்படுத்தலாம்.
ஆனால், அரசோ, அரசு அதிகாரிகளோ மக்கள் வரிப்பணத்தைத் தவறாக பயன்படுத்தக்கூடாது. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த மனுவுக்கு 3 வார காலத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.