ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தென்னை மரம் சாய்ந்து இளைஞர் சாவு

சாலவாக்கம் அருகே தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 10:06 pm

DIN

சாலவாக்கம் அருகே தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஊராட்சி அருகே புதுப்பட்டைச் சேர்ந்தவர் வேலு (எ) வேளாங்கண்ணி (34). இவரது வீடு புதுப்பட்டு அருகே கரும்பாக்கத்தில் உள்ளது. இவர் தனது வீட்டில் புதன்கிழமை ஓய்வுக்காக படிக்கட்டில் உட்கார்ந்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது, அருகில் வலுவிழந்த நிலையில் இருந்த தென்னை மரம் இருந்துள்ளது. பலத்த காற்று வீசியதன் காரணமாக, வலுவிழுந்திருந்த தென்னைமரம் வேலு மீது சாய்ந்த நிலையில் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த வேலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.