மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அழுகிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

மறைமலைநகரை அடுத்த நின்னக்கரை காட்டுப்பகுதியில் மரத்தில் கூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஆண், பெண் ஆகிய இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.

Updated On :9 ஏப்ரல் 2018, 9:49 pm

மறைமலைநகரை அடுத்த நின்னக்கரை காட்டுப்பகுதியில் மரத்தில் கூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஆண், பெண் ஆகிய இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.
நின்னைக்கரை அருகே காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதாகவும் மறைமலைநகர் போலீஸாருக்கு கடதந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வந்தது. 
இதைத் தொடர்ந்து அந்த சடலங்களை மீட்ட போலீஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் உத்தரமேரூரை அடுத்து மணல்மேடு புத்தலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களில் விநாயகமூர்த்திக்கு (30) என்பவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். விநாயகமூர்த்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரகுவின் மனைவி நிஷாவுக்கும் (25) தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இதை குடும்பத்தார் எதிர்த்ததைத் தொடர்ந்து இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு 10 நாள்கள் இருக்கும் என்று தெரிகிறது. 
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.