ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத் துறை அதிகாரிகளுக்கு 5 நாள் பயிற்சி முகாம் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், பெண்கள் மேம்பாடு, விவசாயம், நீர் மேலாண்மை போன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்வையிடவும், இத்துறைகளில் பயிற்சி பெறவும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 25 பொருளாதாரத்துறை அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர்.
அவர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி முகாமை மையத்தின் பதிவாளர் பேராசிரியர் சந்திரமோகன் தொடங்கிவைத்தார். இதில் ஹைதராபாத் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை நிறுவனத்தின் பேராசிரியர் ராஜு ஆப்கன் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தார்.
இங்கு இந்தியாவின் நீடித்த ஊரக வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தவிர இளைஞர் வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, நீர் மேலாண்மை, கிராமிய வளர்ச்சி, விவசாயம் ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முகாமில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர்கள் கோபிநாத், சாகு, போட்சா, பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் கிராமத்திற்கு திங்கள்கிழமை மாலை சென்ற ஆப்கன் அதிகாரிகள் அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி

ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!

2008-க்குப் பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை!

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

