மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வியியல் கல்லூரியின் சார்பாக, ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வில்வராயநல்லூர் சுபம் கல்விக் குழுமங்களில் ஒன்றான சுபம் கல்வியியல் கல்லூரி சார்பாக தற்கால கல்வி நிலையில் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி டீன் என்.பத்ரி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜாஸ்மின் சுஜாதா வரவேற்றார். செயலர் எம்.பவன்குமார் கருத்தரங்க மலரையும், கல்லூரி பேராசிரியர்கள் எழுதிய 3 நூல்களையும் வெளியிட்டார்.
செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் நான்சி நவநீதம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா, வில்வராயநல்லூர் சமூக ஆர்வலர் வி.ராதிகா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.டி.வனிதா கருத்தரங்க அறிக்கையை வாசித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியர் பி.ஜானகிராமன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: சொந்த வயலில் தர்பூசணி பறித்த சிறுவன் கொலை

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

