காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

உ.பி: சொந்த வயலில் தர்பூசணி பறித்த சிறுவன் கொலை

உத்தரப் பிரதேசத்தில் தர்பூசணி பறித்ததற்காக 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UP: Agra village tense after teenager killed for 'plucking watermelons'

பலி.

Published On :

உத்தரப் பிரதேசத்தில் தர்பூசணி பறித்ததற்காக 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் தனது குடும்பத்திற்குச் சொந்தமான வயலில் இருந்து தர்பூசணிகளை 13 வயது சிறுவன் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சிறுவன் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சோனி கேடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்த வயலை சிறுவனின் குடும்பத்தினர் தங்களது கூட்டாளிகளுக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதன் காரணமாக, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்தக் கொலை தொடர்பாக ரியாசுதீன் மற்றும் ஷிராசுதீன் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக ஆக்ரா மேற்கு துணை ஆணையர் ஆதித்யா தெரிவித்தார்.

சிறுவனைத் தேடி வயலுக்குச் சென்ற அவனது சகோதரி உடலைக் கண்டெடுத்தார். உடல் மீட்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Summary

Two persons have been arrested after a 13-year-old boy was killed in Agra for allegedly plucking watermelons from a field owned by his family, police said on Saturday, adding that the incident has led to tension in the area.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.