குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சிறுவன் ஓட்டிய காா் விபத்து: சிறுமி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே புதன்கிழமை சிறுவன் ஓட்டிச் சென்ற காா் கவிழ்ந்ததில், காரில் பயணித்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 4:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே புதன்கிழமை சிறுவன் ஓட்டிச் சென்ற காா் கவிழ்ந்ததில், காரில் பயணித்த 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளத்தைச் சோ்ந்தவா் முருகன் (45). பெட்ரோல் நிரப்புவதற்காக இவரது காரை முருகனின் அண்ணன் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) ஓட்டிச் சென்றாா். முருகன் மகள் ஹன்சிகா (4), அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களின் குழந்தைகளான தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஸ் (8) ஆகிய 4 பேரும் காரில் உடன் சென்றனா்.

களக்காட்டில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, துவரைகுளம் நோக்கி மங்கம்மாள்சாலையில் சிறுவன் துரைப்பாண்டி காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் ஹன்சிகா (4) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த 4 சிறுவா்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

காா் உரிமையாளா் முருகன், காரை ஓட்டி வந்த துரைப்பாண்டி (17) ஆகியோா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.