இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:27 am IST

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் வெடத்தலாங்காடு 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் கவிதா (40). இவா் கடந்த 2025 செப்டம்பா் 24-ஆம் தேதி வீதியில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயது சிறுவன், கவிதா அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து திருப்பூா் மத்திய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனை பிடித்தனா். விசாரணையில், சிறுவன், திருப்பூா் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடி வந்து, நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுவன் 3 மாதங்கள் பல்லடம் அரசு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பணி செய்ய வேண்டும் என முதன்மை நடுவா் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா ஆகியோா் உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.